Tuesday, November 25, 2008

நறுமுகையே நறுமுகையே நீயொரு

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2


Monday, November 10, 2008

மலரோடு மலர் இங்கு

மணிரத்னம் விருதுகளுக்காக படம் எடுப்பவர் என்று திரையுலகில் பலர் சொல்வதுண்டு அவரின் படைப்புக்கள் அதை பறைசாற்றும். 90 களின் ஆரம்பத்தில் மும்பையில் மதக்கலவரம் நிலவிய காலம் அதை களமாக வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட படம் பம்பாய். சிறந்த ஒரு திரைப்படம் அரவித்சாமியை நடிகனாக காட்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான்.
படத்தின் இறுதிக்காட்சியில் இடம் பெற்ற பாடல் இதுவாகும். இப்பாடலை பாடியவர் சித்ரா.


மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்



Saturday, November 1, 2008

மண்ணில் இந்தக்

கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம் காதலைப் போற்றும் ஒரு பாடல். இளையராஜாவின் இசையில் S.P.பாலசுப்பரமணியம் பாடி நடித்து வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் S.P.B இந்த பாடலில் நீண்ட நேரம் மூச்சு விடாமல் பாடிய பகுதியாகும் இந்த பாடலை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
ச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

(மண்ணில் இந்த)



Saturday, October 11, 2008

முன்பே வா என் அன்பே வா

தமிழ் சினிமாவில் பேசப்பட்ட ஒரு ஜோடி சூரியா,ஜோதிகா அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்த படம் சில்லுன்னு ஒரு காதல் 2006ம் ஆண்டு வெளியானது A.R.ரஹ்மானின் இசையில் வெளியாகி பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலே இதுவாகும். ஸ்ரேயா கோஷலின் இனிய குரலில் ஒலித்த பாடல் இதுவாகும்.

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)

[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)

[ஆண்]
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............
.உயிரே........ ஒ ஓ...

[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..

[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்...

[இசை..]

[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா....?..

[பெண்]
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..

[ஆண்]
நீயும் செங்குள செரும்
கலந்தது போலே
கலந்திடலாமா......

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் யார்...

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)



Monday, October 6, 2008

வெண்ணிலவே வெண்ணிலவே...

ரஹ்மானின் இசையில் எதனை தடவைகள் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலை பாடியவர்கள் ஹரிஹரன், சாதனா சர்கம். பாடல் இடம் பெற்ற திரைப்படம் மின்சாரக்கனவு. பாடலுக்கு நடனம் அமைத்து நடித்தவர் பிரபுதேவா. அவருக்கும் A.R.ரகுமானுக்கும் தேசிய விருது வாங்கித்தந்த சூப்பர் பாடல் இது.


வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

இந்த பாடலில் இரு வகை உண்டு அதில் ஒன்று சோகப்பாடல். இரண்டு பாடலுமே சிறந்த பாடல்கள்




சோகப்பாடல்


Saturday, October 4, 2008

இது ஒரு பொன்மாலைப் பொழுது!

இன்று வைரமுத்து என்று ஒரு கவிஞன் இருக்கிறான் என்றால் அவனுக்கு பலமான ஒரு அஸ்திவாரம் கொடுத்தது இந்த பாடல்தான்.
கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடல் இதுதான் இசைஞானியின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியயத்தின் குரலில் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது இந்த பாடல் ஒரு மாலை நேரத்தை வர்ணித்து பாடுவதாக எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் பாடல் படமாக்கப்பட்டதும் ஒரு மாலைப்பொழுதில் இந்த அருமையான பாடலை நீங்களும் ஒருதடவை பார்த்து ரசியுங்கள்

வரிகள்:

ஹே ஹோ ஹ்ம்.. லல லா..

பொன்மாலைப் பொழுது,

இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள், நாணுகிறாள்;
வேறு உடை, பூணுகிறாள்;
இது ஒரு பொன்மாலைப் பொழுது!

ஹ்ம்ம்ம் ஹே ஹான் ஹோ.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்! (ஆயிரம்..)
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..
பூமரங்கள், சாமரங்கள், வீசாதோ!! (இது ஒரு..)

வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்! (வானம்..)
ஒரு நாள் உலகம் நீதிப் பெறும்,,
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால், வேள்விகளை, நான் செய்வேன்... (இது ஒரு..)

அஅஆ... ஹே ஹோ ஹான்.. லல லா..
ஹ்ம்ம்ம் ஹே ஹோ ஹான்.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..


Sunday, September 28, 2008

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது.......

பாடல் இடம்பெற்ற திரைப்படம் இந்திர 1990களில் வெளியான படம். ரஹ்மான் வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த காலகட்டம் இந்தப்படமும் ரஹ்மானின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்தது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் நிலா காய்கின்றது ......... பாடல். வைரமுத்துவின் வரிகளில் ஹரிஹரன் மற்றும் ஹரிணியின் குரலில் இடம்பெற்ற இந்த பாடல் இரு வகையில் உள்ளது.

1>

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

2>

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

.......... நிலா காய்கிறது .........

இந்த இரு பாடலுமே அருமை





Thursday, September 25, 2008

கல்யாண தேன் நிலா......

மௌனம் சம்மதம் படம் மமுட்டி அமலா நடிப்பில் வெளியானது.
இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் கல்யாண தேன் நிலா ..... இந்தபாடல் கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டது. பாடலுக்கு இசை இளையராஜா பாடலைப்பாடியவர் ஜேசுதாஸ் அவரின் பாடல் என்றால் சொல்லவா வேண்டும் மனதை கொள்ளை கொள்ளும் மென்மையான பாடல் .....

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

பாடல் ஒரு இரவுப்பொழுதில் படமாக்கபட்டுள்ளது நீங்கள் ஒருதடவை இந்த பாடலை அமைதியான நேரத்தில் இரவில் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும் பாடலின் இனிமை


கண்ணே கலைமானே.....

மூன்றாம் பிறை உலக நாயகனுக்கு மட்டுமல்ல பலகலைஞர்களுக்கு பெயர்தேடி தந்த படம். படத்தில் மனநிலை சரியில்லாத கதாபத்திரத்தில் நடிகை ஸ்ரீ தேவி நடித்திருப்பார் அவரை பாடி தூங்க வைப்பதற்காக கமல்பாடுவதாக நான் பாடல் படமாக்கப்பட்டு இருக்கும்.
இசை ஞானியின் மென்மையான இசையில் ஜேசுதாசின் தேனான குரலில் அமைந்த இந்தபாடல் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு பாடல் கவிஞர் கண்ணதாசன் இப்பாடலை எழுதி இருந்தார்.

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

பாடல் வரிகள் அற்புதம் இந்த மென்மையான பாடலை நீங்களும் ஒருதடவை பார்த்து இரசியுங்கள்


Saturday, July 12, 2008

மலர்களே மலர்களே இது என்ன........

1996 ம் ஆண்டு வெளிவந்த படம் லவ் பேர்ட்ஸ் பிரபுதேவா மற்றும் நக்மாவின் நடிப்பிலும் இசைப்புயலின் இசையிலும் வெளியான படம் இது. படத்தின் பாடல்கள் அனைத்தும் எல்லோராலும் ரசிக்கபட்டன அத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் இந்த பாடல்
பாடலை எழுதியவர் வைரமுத்து பாடலை பாடியவர்கள் ஹரிஹரன் மற்றும் சித்ரா. ஹரிஹரனை வெளி உலகுக்கு காட்டியவர் இசைப்புயல் எனலாம். அந்த வகையில் ஹரிஹரன் சித்ரா மற்றும் ரஹ்மான் கூட்டணியின் மற்றுமொரு வெற்றி பாடல் இதுவாகும்


மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?
மலைகளே, மலைகளே, இது என்ன நினைவா?
உருகியதே.. எனதுள்ளம்..
பெருகியதே.. விழிவெள்ளம்..

விண்ணோடும் நீதான்..
மண்ணோடும் நீதான்..
கண்ணோடும் நீதான்.. வா..ஆ.அஅஅ..
(மலர்களே,..)(விண்ணோடும்..)

மேகம் திறந்துகொண்டு,
மண்ணில் இறங்கி வந்து,
மார்பில் ஒளிந்துக் கொள்ள, வா.. வா..
மார்பில் ஒளிந்துக் கொண்டால்,
மாறன் அம்பு வரும்,
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா..

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா, அறையா!
மலர் சூடும் வயதில் என்னை, மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை; காதல் ரதியே, ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும், நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம், என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பூவில் நாவிருந்தால்,
காற்று வாய்திறந்தால்,
காதல், காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே, வண்ண நிலவே, நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே, கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..

மறக்காது உன் ராகம்,
மரிக்காது என் தேகம்,

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

மென்மையான இசை அமைதியான நேரத்தில் கண்ணை மூடி கேட்டுப்பாருங்கள் உங்களை அறியாமலே உறங்கி விடுவீர்கள் ஹரிஹரனின் குரல் அற்புதம் இந்த பாடலை ஒரு தடவை கேட்டு பாருங்கள்


powered by www.isaipriyan.blogspot.com



பாடல் காட்சி முழுவதும் வெளி நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
பனி படர்ந்த மலைகள் மஞ்சள் பூக்கள் நிறைந்த அழகியதோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள் பிரபுதேவாவின் நடனம் எல்லாம் சேர்ந்து பாடல் காட்சிக்கு பலம் சேர்த்துள்ளன இரட்டை வேடம் போன்று இரண்டு மூன்று பிரபுதேவாக்கள் தோன்றுவது அப்போதைய தமிழ் திரைத்துறையில் புதிது அதனை நீங்களே பாருங்கள்




எனக்கு பிடித்த இந்த பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்

தென்பாண்டித் தமிழே என்...............

தென்பாண்டித்தமிலே என் சிங்காரக் குயிலே இந்த பாடலில் ஒரு சிறப்பம்சம் உள்ளது இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. இசைஞானியின் இசையில் பாசப் பறவைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இதுவாகும். பாடலுக்கு ஜேசுதாசின் குரலோடு சித்ராவின் குரலும் இசையோடு மேலும் இனிமை சேர்க்கின்றது. இப்பாடல் அண்ணன் தங்கைகிடையிலான பாசத்தை பற்றி இடம்பெற்றுள்ளது. பாடல் வரிகள் அழகான கவிதை.

ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

நீங்களும் ஒரு தடவை கேட்டுப்பாருங்கள்





பாடல் ஒரு வீட்டிலும், கடற்கரையிலும் மாலை நேரம் படமாக்கப்பட்டுள்ளது.பாடல் காட்சியில் சிவகுமார், லட்சுமி, ராதிகா மற்றும் மோகன் ஆகியோர் தோன்றுகின்றனர். இதில் அண்ணனாக சிவகுமார் தங்கையாக ராதிகா இவர்கள் இருவரும் பாடுவதாக பாடல் இடம்பெறுகின்றது. அண்ணன் தங்கை பாசத்தை சொல்கின்றது பாடல் நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.





இந்த பாடல் நிச்சயம் உங்களை கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்
.......மீண்டும் சந்திக்கின்றேன்.........

Sunday, July 6, 2008

மாலையில் யாரோ மனதோடு பேச.......

இசைஞானி இளையராஜா எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்த ஒரு சிறந்த இசையமைப்பாளர். இசைத்துறையில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி தமிழ் திரைத்துறையில் வெகுவாக கால் பதித்தவர்களில் ஒருவர். அவரின் இசையில் சத்ரியன் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலையே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் 1990 ம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் பானுப்ப்ரியாவின் நடிப்பில் வெளி வந்த படம் சத்ரியன் அத்திரைப்படத்திலே சுவர்ணலதாவின் இனிமையான குரலில் இடம் பெற்ற பாடல் இனிமையான இசையோடு அழகான மாலை பொழுதில் தொடர்கின்றது பாடல்
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச... என்ற பாடல் ஸ்வர்ணலதாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

இது பற்றி ஸ்வர்ணலதா -
"நிஜம்தான். அந்தப் பாடல்தான் என் மியூசிக் கேரியரில் ஒரு திருப்பு முனையைத் தந்தது. என் பெயரை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தியது. அந்தப் பாடலின் டியூனை கேட்ட போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளையராஜா சார் இனிமையாக டியூன் போட்டிருந்தார். மணிரத்னம் சாரின் சொந்தப் படமான 'சத்ரியன்' படத்தில் வரும் இந்தப் பாடலை, நான் பாடல் டிராக்கில் மட்டும் தனியாக பாடவில்லை. மொத்த ஆர்க்கெஸ்ட்ராவோடும் சேர்ந்துதான் என் பாடலும் ரெக்கார்டிங் ஆனது. 1990-ல் பாடிய இந்தப் பாடலை இன்று வரைக்கும் ரசிகர்கள் மறக்கவில்லை. நான் போகும் கச்சேரிகளில் எல்லாம் கட்டாயம் என்னை இந்தப் பாடலையும் பாடச் சொல்வார்கள்.
ஒரு தடவை நான் பாடலை கேட்டு பாருங்கள்.






பாடல் படமாக்கபட்ட விதம் அற்புதம் ஒரு மாலை நேரம் அழகான ஒரு ஆற்றங்கரை இனிய சூழல் அழகான காட்சியமைப்பு நீங்களும் ஒரு தடவை இந்த பாடலை பாருங்கள்






சுவர்ணலதாவின் குரலில் மட்டுமல்ல இந்த சிறுமியின் குரலில் கூட நான் பாடல் இனிமைதான்

Saturday, July 5, 2008

பச்சைக் கிளிகள் தோளோடு………..

எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது இந்தியன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும்.

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனீஷா கொய்ராலா,சுக்னயா,நாசர்,கவுண்டமணி,செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. இதற்கு வாலி மற்றும் வைரமுத்து ஆகியோரின் பாடல் வரிகளும், ஹரிஹரன் ஜேசுதாஸ் பாலசுப்ரமணியம் போன்ற பிரபல பாடகர்களின் இணைவும் முக்கிய காரணமாகும். ஒளிப்பதிவு ஜீவா.

லஞ்சத்துக்கு கொள்ளிபோட துணிந்த வயோதிக தியாகியாக.. வெள்ளி நரையும், சுருங்கிய முகமும், தளர்ந்த உடலும்,தடுமாறாத உறுதியும் கொண்ட “இந்தியன்’ தாத்தாவாக நடித்து இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களைகமல் கட்டிக்கொண்ட படமிது. கமலுக்கு தேசிய விருதினை பெற்று தந்ததோடு திரைத்துறையின் அதியுயர் விருதான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

இனி விடயத்துக்கு வருவோம் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற “பச்சை கிளிகள் தோளோடு……..” என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் நானும் கூட…..

ஜேசுதாஸின் அற்புதமான குரல் பாடலுக்கு மேலும் பலம். பாடல் என்கின்ற பெயரில் கொச்சைத்தனமான வரிகள் எதுவும் இல்லாமல் ஒரு பாடலை கொடுத்ததற்கு கவிஞருக்கும் பாடலை அனுமதித்ததற்கு இயக்குனருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.

“பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை…” என்று மனித வாழ்க்கையின் ஆனந்தங்களை சொல்கின்றது.
அன்பில் தான் வாழ்க்கை இருக்கின்றது பணம் எதற்கு…. அழகாக சொல்கின்றார் கவிஞர். ஒரு சிறிய விவசாயக்குடும்பம் பெற்றோ இரண்டு பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கையின் சந்தோசங்களை , அவர்களுக்கிடையிலான அன்பை பதிவு செய்ய பாடல் உதவி உள்ளது. எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் அந்த அழகிய வாழ்க்கை.
நீங்களும் கேட்டுப்பாருங்கள் இந்த பாடலை
இசை- ரஹ்மான் பாடியவர் - ஜேசுதாஸ்


அடுத்து பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலிலே ஒளிப்பதிவாளர் ஜீவா மண் மணம் மாறாத, இயற்கையோடு இணைந்த ஒரு கிராமத்தை (கதையின்படி திருமுல்லைவாயில்) அழகாக பதிவு செய்துள்ளார். பச்சை பசேலென்ற வயல் வெளிகள், நீர் நிலைகள் போன்றவற்றை கண்முன் நிறுத்தி இருக்கின்றார். நடனம் என்ற போர்வையில் பாடலைக் கெடுக்காமல் கதை ஓட்டத்திலேயே பாடலை படமாக்கி இருப்பது பாராட்டத்தக்க விடயம். பொதுவாக அப்பாக்களுக்கு ஆண் பிள்ளைகளை விட பெண்பிள்ளைகள் மீது பாசம் அதிகம் அது இந்த பாடலில் காட்டப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி பானைக்கு மண் குழைக்கும் இடத்தில் எல்லோரும் ஆட முயற்சி செய்து சறுக்கி விழுவதும் அதில் முதிய வயது கமல் விழாமல் ஆடும் போது பின்னால் நின்று மனைவி ஆடுவதும் கணவன் பார்த்தவுடன் சேலைத்தலைப்பை எடுத்து போர்த்துவதும் கவிதையான தருணங்கள். இது அந்த பாடல்க்காட்சி பார்த்து ரசியுங்கள் என்னோடு சேர்ந்து.


அறிமுகம்

நான் ஒரு தீவிரமான இசை ரசிகன். தினம் சப்பிடுறனோ இல்லையோ பாட்டுக்கள் கேட்பேன். நல்ல பாடல்களுக்கு காலம் இல்லை அது எந்த கால பாடலாயினும் அதனை விரும்பி கேட்பேன். அந்த வகையில் நான் விரும்பிக்கேட்ட கேட்டுக்கொண்டிருக்கின்ற பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பதிவு.