ரஹ்மானின் இசையில் எதனை தடவைகள் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலை பாடியவர்கள் ஹரிஹரன், சாதனா சர்கம். பாடல் இடம் பெற்ற திரைப்படம் மின்சாரக்கனவு. பாடலுக்கு நடனம் அமைத்து நடித்தவர் பிரபுதேவா. அவருக்கும் A.R.ரகுமானுக்கும் தேசிய விருது வாங்கித்தந்த சூப்பர் பாடல் இது.
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே)
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)
இந்த பாடலில் இரு வகை உண்டு அதில் ஒன்று சோகப்பாடல். இரண்டு பாடலுமே சிறந்த பாடல்கள்
சோகப்பாடல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment