இன்று வைரமுத்து என்று ஒரு கவிஞன் இருக்கிறான் என்றால் அவனுக்கு பலமான ஒரு அஸ்திவாரம் கொடுத்தது இந்த பாடல்தான்.
கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடல் இதுதான் இசைஞானியின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியயத்தின் குரலில் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது இந்த பாடல் ஒரு மாலை நேரத்தை வர்ணித்து பாடுவதாக எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் பாடல் படமாக்கப்பட்டதும் ஒரு மாலைப்பொழுதில் இந்த அருமையான பாடலை நீங்களும் ஒருதடவை பார்த்து ரசியுங்கள்
வரிகள்:
ஹே ஹோ ஹ்ம்.. லல லா..
பொன்மாலைப் பொழுது,
இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள், நாணுகிறாள்;
வேறு உடை, பூணுகிறாள்;
இது ஒரு பொன்மாலைப் பொழுது!
ஹ்ம்ம்ம் ஹே ஹான் ஹோ.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்! (ஆயிரம்..)
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..
பூமரங்கள், சாமரங்கள், வீசாதோ!! (இது ஒரு..)
வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்! (வானம்..)
ஒரு நாள் உலகம் நீதிப் பெறும்,,
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால், வேள்விகளை, நான் செய்வேன்... (இது ஒரு..)
அஅஆ... ஹே ஹோ ஹான்.. லல லா..
ஹ்ம்ம்ம் ஹே ஹோ ஹான்.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment