Saturday, July 12, 2008

மலர்களே மலர்களே இது என்ன........

1996 ம் ஆண்டு வெளிவந்த படம் லவ் பேர்ட்ஸ் பிரபுதேவா மற்றும் நக்மாவின் நடிப்பிலும் இசைப்புயலின் இசையிலும் வெளியான படம் இது. படத்தின் பாடல்கள் அனைத்தும் எல்லோராலும் ரசிக்கபட்டன அத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் இந்த பாடல்
பாடலை எழுதியவர் வைரமுத்து பாடலை பாடியவர்கள் ஹரிஹரன் மற்றும் சித்ரா. ஹரிஹரனை வெளி உலகுக்கு காட்டியவர் இசைப்புயல் எனலாம். அந்த வகையில் ஹரிஹரன் சித்ரா மற்றும் ரஹ்மான் கூட்டணியின் மற்றுமொரு வெற்றி பாடல் இதுவாகும்


மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?
மலைகளே, மலைகளே, இது என்ன நினைவா?
உருகியதே.. எனதுள்ளம்..
பெருகியதே.. விழிவெள்ளம்..

விண்ணோடும் நீதான்..
மண்ணோடும் நீதான்..
கண்ணோடும் நீதான்.. வா..ஆ.அஅஅ..
(மலர்களே,..)(விண்ணோடும்..)

மேகம் திறந்துகொண்டு,
மண்ணில் இறங்கி வந்து,
மார்பில் ஒளிந்துக் கொள்ள, வா.. வா..
மார்பில் ஒளிந்துக் கொண்டால்,
மாறன் அம்பு வரும்,
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா..

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா, அறையா!
மலர் சூடும் வயதில் என்னை, மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை; காதல் ரதியே, ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும், நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம், என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பூவில் நாவிருந்தால்,
காற்று வாய்திறந்தால்,
காதல், காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே, வண்ண நிலவே, நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே, கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..

மறக்காது உன் ராகம்,
மரிக்காது என் தேகம்,

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

மென்மையான இசை அமைதியான நேரத்தில் கண்ணை மூடி கேட்டுப்பாருங்கள் உங்களை அறியாமலே உறங்கி விடுவீர்கள் ஹரிஹரனின் குரல் அற்புதம் இந்த பாடலை ஒரு தடவை கேட்டு பாருங்கள்


powered by www.isaipriyan.blogspot.com



பாடல் காட்சி முழுவதும் வெளி நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
பனி படர்ந்த மலைகள் மஞ்சள் பூக்கள் நிறைந்த அழகியதோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள் பிரபுதேவாவின் நடனம் எல்லாம் சேர்ந்து பாடல் காட்சிக்கு பலம் சேர்த்துள்ளன இரட்டை வேடம் போன்று இரண்டு மூன்று பிரபுதேவாக்கள் தோன்றுவது அப்போதைய தமிழ் திரைத்துறையில் புதிது அதனை நீங்களே பாருங்கள்




எனக்கு பிடித்த இந்த பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்

No comments: