Sunday, September 28, 2008

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது.......

பாடல் இடம்பெற்ற திரைப்படம் இந்திர 1990களில் வெளியான படம். ரஹ்மான் வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த காலகட்டம் இந்தப்படமும் ரஹ்மானின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்தது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் நிலா காய்கின்றது ......... பாடல். வைரமுத்துவின் வரிகளில் ஹரிஹரன் மற்றும் ஹரிணியின் குரலில் இடம்பெற்ற இந்த பாடல் இரு வகையில் உள்ளது.

1>

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

2>

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

.......... நிலா காய்கிறது .........

இந்த இரு பாடலுமே அருமை





Thursday, September 25, 2008

கல்யாண தேன் நிலா......

மௌனம் சம்மதம் படம் மமுட்டி அமலா நடிப்பில் வெளியானது.
இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் கல்யாண தேன் நிலா ..... இந்தபாடல் கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டது. பாடலுக்கு இசை இளையராஜா பாடலைப்பாடியவர் ஜேசுதாஸ் அவரின் பாடல் என்றால் சொல்லவா வேண்டும் மனதை கொள்ளை கொள்ளும் மென்மையான பாடல் .....

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

பாடல் ஒரு இரவுப்பொழுதில் படமாக்கபட்டுள்ளது நீங்கள் ஒருதடவை இந்த பாடலை அமைதியான நேரத்தில் இரவில் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும் பாடலின் இனிமை


கண்ணே கலைமானே.....

மூன்றாம் பிறை உலக நாயகனுக்கு மட்டுமல்ல பலகலைஞர்களுக்கு பெயர்தேடி தந்த படம். படத்தில் மனநிலை சரியில்லாத கதாபத்திரத்தில் நடிகை ஸ்ரீ தேவி நடித்திருப்பார் அவரை பாடி தூங்க வைப்பதற்காக கமல்பாடுவதாக நான் பாடல் படமாக்கப்பட்டு இருக்கும்.
இசை ஞானியின் மென்மையான இசையில் ஜேசுதாசின் தேனான குரலில் அமைந்த இந்தபாடல் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு பாடல் கவிஞர் கண்ணதாசன் இப்பாடலை எழுதி இருந்தார்.

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

பாடல் வரிகள் அற்புதம் இந்த மென்மையான பாடலை நீங்களும் ஒருதடவை பார்த்து இரசியுங்கள்